மெச்சூரிட்டி இல்லாம பேசுறாங்க ஜோதிகா!: எஸ்.வி.சேகர் ட்வீட்

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (12:44 IST)
கோவில் கட்ட செலவு செய்யும் பணத்தை கொண்டு தரமான பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டலாம் என நடிகை ஜோதிகா பேசியுள்ளதற்கு பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் முரண்பாடு தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கிற்கு முன்னால் நடந்த சினிமா விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய நடிகை ஜோதிகா படப்பிடிப்பிற்காக தஞ்சாவூர் சென்றிருந்தபோது தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்றதாகவும், து பெரும் பொருட் செலவில் பராமரிக்கப்பட்டதாகவும், அதே சமயம் அருகில் இருந்த மருத்துவமனை பராமரிப்பின்றி மோசமாக இருந்ததையும் கண்டு வருந்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் கோவில்களுக்கு ஏராளமான செலவுகளை செய்வதை காட்டிலும் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு செலவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

நடிகை ஜோதிகாவின் கருத்தை மறுத்து பதிவிட்டுள்ள பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் “ஜோதிகா 100% மெச்சூரிட்டி இல்லாமல் பேசுகிறார். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று. இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம். கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம்.” என்று கூறியள்ளதோடு உங்கள் மாமனாரிடம் இது குறித்து கேளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்