பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சமபதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கடந்த சில நாட்களாக அவருக்கு கொலை மிரட்டல் ஆடியோ, பரபரப்பான வீடியோ என்று தொடர் சிக்கலில் தவித்து வந்தார்.
இதையடுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் சர்ச்சையாக பேசுவதும், யாரும் பார்க்க விரும்பாத கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதுமாக இருந்து வரும் மீரா மிதுன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அனிருத் மட்டும் யுவன் சங்கர் ராஜாவுடன் ஒரு பார்ட்டியில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இது 2018 ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கட்பிரபு எடுத்த புகைப்படம் என பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் "மறக்கமுடியாத அனுபவமா இருக்கும் போல என்ன பார்ட்டி ? பார்ட்டியில் என்ன செய்தீர்கள் ? என்றெல்லாம் நோண்டி நோண்டி கேள்வி கேட்டு மீராவை கடுப்பேற்றி வருகின்றனர்.