வாரிசு படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். விஜய் படத்துக்கு அவர் முதல் முதலாக இசையமைத்துள்ளார்.
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே பாடல் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. அதே நேரத்தில் பாடல் முன்பே வெளியாக பழைய சினிமா பாடல்களின் மெட்டுகளில் அமைந்துள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் எஸ் தமன் “இன்றுதான் ரஞ்சிதமே பாடலின் வீடியோவைப் பார்த்தேன். பாடல் திரையில் வரும் போது உங்களால் நடனமாடாமல் இருக்கையில் அமர்ந்திருக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.