ஞானவேல்ராஜாவுக்கு பதிலாக வேறு நபரை நியமனம் செய்த விஷால்

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2017 (23:28 IST)
சமீபத்தில் தயாரிப்பாளர் சங்க செயலாளரான ஞானவேல்ராஜா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட விநியோகிஸ்தர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் ஞானவேராஜா ராஜினாமா செய்த செயலாளர் பதவிக்கு S.S.துரைராஜூ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழுவில் திரு.S.S.துரைராஜூ செயலாளராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கபட்டதாகவும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா செயலாளர் பதவி விலகியதால் இந்த மாற்றம் செய்யப்பட்டதாகவும் தயாரிப்ப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்

தற்போது ஞானவேல்ராஜா, தயாரிப்பாளர் சங்கத்தின் பதவியும், விநியோகிஸ்தர் சங்கத்தின் பதவியும் இல்லாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்