தமிழ் ராக்கர்ஸை பிச்சை எடுக்க வைத்த தயாரிப்பாளர் சங்கம்

வியாழன், 30 நவம்பர் 2017 (19:52 IST)
தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரை கேட்டாலே ஒவ்வொரு தயாரிப்பாளர்களுக்கும் அலர்ஜியாக இருந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இடைவிடாத முயற்சியால் கிட்டத்தட்ட தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடங்கிவிட்டது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆன தினமே தங்களது இணையதளத்தில் புதிய படங்களை ஒளிபரப்பி வந்தது. இதற்கு  முதல் காரணம் அதில் கிடைக்கும் விளம்பர வருமானம் தான். அந்த இணையதளத்தின் விளம்பரத்தில் மட்டுமே லட்சக்கணக்கில் கிடைத்து வருவதால் முதலில் அந்த விளம்பரங்களை நிறுத்த தயாரிப்பாளர் சங்கத்தின் சைபர் டீம் முடிவு செய்தது.

இதன் பயனாக தற்போது தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஒரு விளம்பரம் கூட இல்லை. விளம்பரம் இல்லாமல் இணையதளத்தை நடத்த முடியாது என்பதை புரிந்து கொண்ட தமிழ் ராக்கர்ஸ் தற்போது டுவிட்டரில், 'தயாரிப்பாளர் சங்கம் எங்களுக்கு கிடைக்கும் விளம்பரங்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டது. எதுவுமே இந்த உலகில் இலவசமாக கிடைக்காது, எனவே எங்களுக்கு நன்கொடை கொடுங்கள்' என்று கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட சினிமா ரசிகர்களிடம் தமிழ் ராக்கர்ஸ் பிச்சை கேட்டுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு சரியான வகையில் ஆப்பு வைத்த தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து தனது மகிழ்ச்சியை தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்