‘சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் நிலைமை’…. தயாரிப்பாளர் SR பிரபுவின் எச்சரிக்கை பதிவு

செவ்வாய், 31 மே 2022 (15:37 IST)
தமிழ் சினிமாவின் தற்போதைய வியாபார நிலைமை குறித்து தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பகிர்ந்துள்ள டிவீட் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களை வைத்து படங்கள் மற்றும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என இரண்டு பாதைகளிலும் வெற்றிகரமாக செயல்படுபவர் எஸ் ஆர் பிரபு. ஒரு பக்கம் சூர்யா மற்றும் கார்த்தியின் படங்களைத் தயாரித்தாலும் மறுபக்கம் அருவி, மாயா போன்ற படங்களையும் தயாரித்து வருபவர்.

இந்நிலையில் இன்று அவர் பகிர்ந்துள்ள ஒரு டிவீட் கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் “எல்லோரும் வேகமாக படத்தை தொடங்கி முடிக்க என நினைக்கின்றனர். முதலில் ஓடிடி உடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வது, பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் 2022 ஆம் ஆண்டு முழுவதறகும் முன்னணி ஓடிடி நிறுவனங்களின் அட்டவணைகள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. சிறு மற்றும் குறு பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் அல்லது வட்டிக்கு வாங்கி படம் எடுப்பவர்கள் அபாயத்தில் இருக்கிறார்கள். #BeSafeTamilCinema” என எச்சரிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்