“இன்னும் இரண்டு படங்கள் சேர்ந்து பண்ணலாம் சார்…”- விஷாலுக்குக் கோரிக்கை வைத்த எஸ் ஜே சூர்யா!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (14:33 IST)
விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆனத் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’.  இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி சோலாவாக ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

படத்தில் விஷாலுக்கு இணையான ஸ்கிரீன் ஸ்பேஸை எஸ் ஜே சூர்யாவுக்குக் கொடுத்திருந்ததும் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் பேசிய எஸ் ஜே சூர்யா “விஷாலுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நாம சேர்ந்து இன்னும் 2 படம் பண்ணலாம். இல்லன்னா 20 படம் கூட பண்ணலாம்… ஆனால் நம்முடைய இந்த உறவு மிஸ் ஆகிவிடக் கூடாது.

எனக்கு இவ்வளவு பெரிய ஸ்பேஸ் கொடுத்த உங்களின் பரந்த மனதைப் பார்க்கும் போது ‘இவந்தாண்டா ஹீரோ’ என தோன்றுகிறது.” என விஷாலைப் பாராட்டி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்