இனிமேல் இலவசம் கிடையாது.. அப்புக்குட்டி படத்தில் விஜய் அறிவிப்புடன் கூடிய போஸ்டர்..!

Mahendran

புதன், 9 ஜூலை 2025 (15:15 IST)
நடிகர் அப்புகுட்டி நடித்த திரைப்படம் ஒன்றின் ட்ரெய்லர் வெளியாகி உள்ள நிலையில், அந்த ட்ரெய்லரில் உள்ள ஒரு காட்சியில் "இனிமேல் இலவசம் கிடையாது" என முதல்வர் விஜய் அறிவிக்கும் போஸ்டர் இருப்பதை அடுத்து, விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், மற்ற அரசியல் கட்சிகள் இந்த ட்ரெய்லருக்கு கண்டனம் தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அப்புகுட்டி, தினேஷ், தம்பி ராமையா உள்பட பலரது நடிப்பில், கோபி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'யாதும் அறியான்'. திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தில் ஒரு காட்சியில் ஒரு போஸ்டர் வருகிறது. 
 
அதில் விஜய் புகைப்படத்துடன் "தமிழகத்தில் இனி இலவசம் கிடையாது, இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்கு புதிய திட்டங்கள்,  முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு" என இடம்பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது, இந்த படத்தின் கதை நடக்கும் காலகட்டத்தில் விஜய் முதலமைச்சர் ஆகியுள்ளதாக காட்டியிருப்பார்கள் என்று தெரிய வருகிறது.
 
இந்த போஸ்டரை பார்த்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், மற்ற அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்சார் போர்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்