திடீரெனப் அஜித் படம் பற்றிப் பரவிய தகவல்.. உடனடியாகப் பதிலளித்த சுரேஷ் சந்திரா!

vinoth

வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (17:06 IST)
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.

வேலை நாட்களில் வசூல் குறைந்தாலும் வார இறுதி விடுமுறை நாட்களில் நல்ல வசூலை இன்னும் பெற்று வருகிறது. மே 1 ஆம் தேதி சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம் ரிலீஸாகும் வரை இந்த படத்துக்குக் கணிசமான வசூல் இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இதுவரை இந்த படம் தமிழகத்தில் மட்டும் 172+ கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்நிலையில் அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அந்தப் பட்டியலில் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் தனுஷ் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் திடீரென அஜித்தின் அடுத்தப் படத்தை புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார்தான் இயக்கப் போகிறார் என்று ஒரு தகவல் பரவியது. ஆனால் அந்த தகவல் அடிப்படை உண்மையற்றது என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அதை மறுத்துள்ளார். ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில்தான் அஜித்தின் அடுத்தப் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்