முண்டாசுப்பட்டி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்த நடிகர் ராம்தாஸ் அதன் பின்னர் அந்த படத்தில் நடித்த கதாபாத்திரப் பெயரான முனீஸ்காந்த் என்ற பெயராலே அழைக்கபப்ட்டு வருகிறார். தொடர்ந்து பல நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவர் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சந்தானம், சூரி மற்றும் யோகி பாபு வரிசையில் தற்போது அவரும் கதாநாயகன் ஆகியுள்ளார். லோகேஷ் குமார் என்பவர் இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் அவர் மையக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இதில், ருத்ரன் பிரவீன், ஷாதிகா, மவுரிஷ் தாஸ், அஷ்வின், நாகராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.