அஜித் நடித்த "குட் பேட் அக்லி" என்ற திரைப்படத்தில் இளையராஜா கம்போஸ் செய்த சில பாடல்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
அதுமட்டுமின்றி, இளையராஜாவுக்கு ஆதரவாக அவருடைய சகோதரர் கங்கை அமரன் பேசினார் என்பதும், "ஏழு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் ஏன் இளையராஜா பாடலை பயன்படுத்த வேண்டும்? சொந்தமாக இசை கம்போஸ் செய்ய வேண்டியது தானே?" என்ற கேள்வி எழுப்பியிருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கங்கை அமரன் மகனும் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஆன பிரேம்ஜி, இது குறித்த கேள்விக்கு பதிலளித்த போது, "அஜித் படம் இளையராஜா பாடல்கள் வைத்து தான் ஓடுது" என்று சொல்வதெல்லாம் சும்மா, "தல தான் அந்த படத்தின் வெற்றிக்கு காரணம்" என்று கூறினார்.
ஆனால் அதே நேரத்தில், "ராயல்டி என்பது எல்லா இசையமைப்பாளர்களுக்கும், பாடகர்களுக்கும் கிடைக்கும்; நானே பதினைந்து படங்களுக்கு மியூசிக் பண்ணியிருக்கிறேன், எனக்கும் ராயல்டி வந்து கொண்டு தான் இருக்கேன்" என்றும், "என் பெரியப்பா இளையராஜா ராயல்டி கேட்பதில் எந்த தவறும் இல்லை" என்றும் அவர் கூறினார்.