அஜித்தின் செல்ஃபோனில் ரஜினியின் ‘Hukum’ பாடல்தான் ரிங்டோனா?..!

vinoth

திங்கள், 1 செப்டம்பர் 2025 (09:48 IST)
தன்னுடைய ‘குட் பேட் அக்லி’ படம் அடைந்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அஜித்குமார் கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் ஆர்வமாகக் கலந்துகொண்டு வருகிறார். இனிமேல் வருடத்துக்கு ஒரு படம், மீத நேரத்தில் கார் ரேஸ் பந்தயங்கள் என திட்டம் வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸ் பந்தயத்தில் அவரது அணி கலந்துகொண்டு வருகிறது. அப்போது அவரை ஒரு ஊடகவியலாளர் நேர்காணல் செய்ய வந்தபோது “எல்லோரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் எளிது என்று நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயாராவது சவாலானது. அதனால் மோட்டார் ஸ்போர்ட்ஸை பிரபலப்படுத்துங்கள்; என்னை ப்ரமோட் பண்ணாதீங்க. நிச்சயமாக இந்தியாவில் இருந்து ஒரு f1 ரேஸர் வந்து உலகளவில் கவனம் ஈர்ப்பார்.” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த போட்டியின் அஜித்தை ரசிகர்கள் சூழ்ந்துகொண்ட போது அவரது போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது ரிங்டோனாக ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற ‘ஹுக்கும் ‘ பாடல் ஒலித்துள்ளது. இதை நேரில் கண்ட ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர அது வைரல் ஆகி வருகிறது. அஜித், ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்