ருத்ரன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது? படக்குழு வெளியிட்ட அப்டேட்!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (11:47 IST)
ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் நடிப்பில் உருவாகும் ருத்ரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும், அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ‘ருத்ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தை திடீரென தயாரிப்பாளர் கதிரேசனே இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து சென்னை மற்றும் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு சில கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்