டி.எம்.செளந்திரராஜன் 100வது பிறந்த நாள்: அண்ணாமலை வாழ்த்து!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (11:19 IST)
டி.எம்.செளந்திரராஜன் 100வது பிறந்த நாள்: அண்ணாமலை வாழ்த்து!
பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி எம் சௌந்தரராஜன் அவர்களின் 100வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார் 
 
கடந்த 1922 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி மதுரையில் சௌராஷ்டிரா குடும்பத்தில் பிறந்தவர் டி எம் சௌந்தரராஜன். இவர் ஆயிரக்கணக்கான திரைப்பட பாடல்கள் மற்றும் பக்தி பாடல்களை பாடியுள்ளார் என்பதும் அவரது ஒவ்வொரு பாடலும் இன்றும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று டி எம் சௌந்தரராஜன் 100வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
TMS திரை இசைத் திலகத்திற்கு இன்று நூற்றாண்டு.
 
மதுரை சௌராஷ்டிரம் தந்த மகத்தான இசை பிரவாகம். 
மூன்று தலைமுறைகள் தாண்டி, மூப்பில்லாத பாடிய முத்தமிழ்! 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்