RRR படத்தைப் பார்க்காமலேயே அவ்வளவு பேசினீங்களா?... பிரியங்கா சோப்ராவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!

Webdunia
புதன், 17 மே 2023 (09:07 IST)
சமீபத்தில் நடந்த ஆஸ்கர் மேடையில் இந்தியா சார்பாக சிறந்த பாடலுக்காக கலந்துகொண்ட RRR ஒரு பாலிவுட் படம் என சொல்லப்பட்டது விவாதங்களைக் கிளப்பியது. இந்தியாவில் 5க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படம் ரிலீஸ் ஆனாலும், RRR ஒரு தெலுங்கு படம்தான். மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டது.

பின்னர் இதுபற்றி பேசிய பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இப்போது இதுபற்றி மேலும் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார். ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் “RRR பாலிவுட் படம் இல்லை. ஒரு தமிழ்ப் படம்” என தவறாகக் கூறினார். இது இப்போது இணையத்தில் இப்போது ட்ரோல்களுக்கு ஆளாகியுள்ளது.

இதையடுத்து இப்போது அவர் கலந்துகொண்ட அவரிடம் “RRR படத்தை பார்த்தீர்களா?” எனக் கேட்ட போது “இன்னும் பார்க்கவில்லை. எனக்கு நிறைய நேரம் கிடைப்பதில்லை. ஆனால் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான் பரப்பேன்” எனக் கூறியுள்ளார். ஆஸ்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது ஆர் ஆர் ஆர் படத்துக்கு வாழ்த்துகள் சொல்லி ட்வீட் செய்திருந்தார். அதை குறிப்பிட்டு இப்போது நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்