என்னைவிட இளமையா இருக்காங்க... திரிஷாவை பார்த்து பொறாமைப்படும் 19 வயது நடிகை!

திங்கள், 15 மே 2023 (19:48 IST)
தெலுங்கு நடிகையான கீர்த்தி ஷெட்டி உப்பெண்ணா திரைப்படத்தின் மூலமாக அறிமுகம்ஆனார். அந்த ஒரு படத்திலேயே தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இதையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். 
 
சூர்யாவின் வணங்கான் படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் படத்தில் இருந்து சூர்யா வெளியேறிவிட்ட நிலையில் இப்போது இவரும் வெளியேறியுள்ளார். அதனால் தமிழில் நல்ல அறிமுகத்துக்காக காத்திருக்கிறார்.
 
இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில், திரிஷா தான் என்னுடைய பேவரைட் ஹீரோயின் என்று கூறியுள்ள அவர், 19 வயதாகும் என்னை விட 40 வயதாகும் திரிஷா இளமையாக தெரிகிறார் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்