ஹாலிவுட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள ஆர்.ஆர்.ஆர் - 2 ஆம் பாகம்! ராஜமெளலியின் தந்தை தகவல்

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (14:00 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமெளலி. இவர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆர்.ஆர்.ஆர் படத்தின் 2 ஆம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட்,  அஜய் தேவ்கன்,  ஸ்ரேயா சரண், சமுத்திரக்னி, உள்ளிட்டோர் நடித்து   கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாகுபலி பட சாதனையை முறியடித்து வசூல் சாதனை படைத்தது.  சமீபத்தில், ஜப்பான் மொழியில், இப்படம் டப் செய்யப்பட்டு வெளியானது. அங்கும்  மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற  நிலையில்,    உலகம் முழுவதும் இப்படம் ரூ.1,235 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.

சமீபத்தில், ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது மற்றும் ஆஸ்கர் விருது கிடைத்தது. இவ்விருதை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் சந்திரபோஸ் ஆகிய இருவரும் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த  நிலையில், ஆர்.ஆர்.ஆர். படத்தின் 2 ஆம் பாகம் எப்போது உருவாகும் என்று கேள்வி எழுப்பினர். இந்த நிலையில்,  இப்படத்தின் 2 ஆம் பாகத்திற்கு திட்டமிட்டுள்ளதாக இப்படத்தின் திரைக்கதை ஆசிரியரும்  ராஜமெளலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது: ''ஆர்.ஆர்.ஆர் படத்தின் 2 ஆம் பாகம் உருவாக்கும் திட்டமிருக்கிறது. இதிலும், ராம்சரண் மற்றும் என்.டி.ஆர் இருவரும் நடிப்பார்கள். ஹாலிவுட் தரத்தில்  இப்படம் உருவாகவுள்ளதால், பிரபல ஹாலிவுட் நிறுவனம் இப்படடத்தை தயாரிக்கவுள்ளது. இப்படத்தை ராஜமெளலி அல்லது அவரது மேற்பார்வையில் இப்படம் உருவாகும்'' என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்