சிக்கலில் ரவுடி பேபி சூர்யா, ஜிபி முத்து… சேனல் முடக்கம்??

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (18:35 IST)
யூடியூப் உள்ளிட்ட  சமூக வலைதளங்களில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டு வருவதாக  ஜிபி.முத்து, ரவுடி பேபில் சூர்யா  உள்ளிட்ட யூடியூப் பிரபலங்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

யூடியூப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட  சமூகவலைதளங்களில் சிறியோர் முதல் பெரியோர் வரை உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பப்ஜி மதன் ஆபாசமாகப் பேசியதாக புகாரளிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், யூடியூப் உள்ளிட்ட  சமூக வலைதளங்களில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டு வருவதாக  ஜிபி.முத்து, ரவுடி பேபில் சூர்யா  உள்ளிட்ட யூடியூப் பிரபலங்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக ஆபாசமாகப் பேசித் தனது சமூக வலைதளப் பக்கத்தை நடத்தி வரும் ஜிபி.முத்து, ரவுடிபேபி சூர்யா உள்ளிட்ட 8 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பிரபல இணையதள சேனல் அவர்கள் மீது நீதிமன்றத்தில் புகார் அளித்து, அவர்களின் சேனலை முடக்க வேண்டி மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்