மரைக்காயர் சோலோ ரிலீஸூக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மலையாள திரையுலகம்!

செவ்வாய், 29 ஜூன் 2021 (16:42 IST)
மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கியுள்ள மரைக்காயர் திரைப்படம் ஒட்டுமொத்தமாக கேரளாவில் உள்ள எல்லா திரையரங்குகளிலும் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

இந்திய சினிமாவில் பிரமாண்ட திரைப்படங்களை இயக்கி பெயர் போனது பாலிவுட் சினிமா தான். ஆனால் கடந்த சில நாட்களாக அவர்களையே மிஞ்சும் அளவிற்கு தென்னிந்திய சினிமா இயக்குனர்கள் பிரம்மாண்டத்தில் பிரமாண்டமாய் படமியக்கி வருகின்றனர். அந்தவகையில் தற்போது பாகுபலி படத்திற்கு இன்னொரு வரலாற்று சிறப்பிமிக்க திரைப்படம் உருவாகி வருகிறது.

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் இப்படம் மலையாளத்தில் மரைக்கார் அரவிபிக் கடலிண்டே சிம்ஹம் என்றும் தமிழில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு, அசோக் செல்வன், பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் சென்ற ஆண்டே ரிலீஸாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அதனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்ததால் மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகி மூன்று வாரங்களுக்கு மட்டும் 600 திரையரங்குகளில் ஓடும் என அறிவிகக்ப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மற்ற படங்கள் எதுவும் ரிலீஸாகாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதற்கு மலையாள திரையுலகினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனராம். மலையாள சினிமாவில் படங்களை திரையிடுவதிலும் திரைகளின் எண்ணிக்கையிலும் விதிகள் கடுமையாக பின்பற்ற பட்டு வருகின்றன. அதை மீறி மரைக்காயர் படம் ரிலீஸ் செய்ய கடுமையான எதிர்ப்பு இப்போது எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்