நயன்தாராவுக்கு மட்டும் நன்றி கடிதமா? புலம்பும் மாஸ் நடிகர்கள்

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (18:57 IST)
சமீபத்தில் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் தமிழ் திரையுலக நடிகர் நடிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். பெப்சி அமைப்பில் இடம் பெற்றுள்ள தொழிலாளர்கள் அனைவரும் படப்பிடிப்பு இல்லாததால் வறுமையில் வாடுவதாகவும் அவர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்
 
இதனை அடுத்து ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்பட பல நடிகர்கள் லட்சக்கணக்கில் நிதி உதவி செய்தனர். அதுமட்டுமின்றி ஒருசிலர் நூற்றுக்கணக்கான மூடை அரிசியை மூட்டைகளையும் பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மாஸ் நடிகர்கள் பலர் வரிசையாக பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி உதவி செய்த நிலையில் நடிகைகள் ஓரிருவர் தவிர யாருமே நிதி உதவி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஐஸ்வர்யாராஜேஷ் மட்டுமே ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி செய்திருந்தார்
 
இந்த நிலையில் இன்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் ரூ.20 லட்சம் பெப்சி தொழிலாளர்களை நிதி உதவி செய்துள்ளார். இதனை அடுத்து பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் இதற்காக ஒரு நன்றி கடிதத்தை எழுதி அதனை பத்திரிகைகளுக்கும் அனுப்பி உள்ளார். இந்த நன்றி கடிதம் தற்போது வைரலாகி வருகிறது
 
நயன்தாராவை விட பல மடங்கு நிதி உதவி செய்தவர்களுக்கு எல்லாம் நன்றிக் கடிதம் அனுப்பாத ஆர்கே செல்வமணி தற்போது நயன்தாராவுக்கு மட்டும் நன்றி கடிதம் அனுப்புவது ஏன்? என்று மாஸ் நடிகர்கள் சிலர் புலம்பி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்