ஆர்ஜே பாலாஜியின் அடுத்த பட டைட்டில் இதுதான்: நாயகி யார் தெரியுமா?

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (20:56 IST)
ஆர்ஜே பாலாஜி நடிக்க உள்ள அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் அந்த படத்தின் நாயகி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
எல்கேஜி, மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் ஆகிய 3 படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து இயக்கிய ஆர்ஜே பாலாஜி அடுத்த படத்திற்கு தற்போது தயாராகியுள்ள்ஆர்.
 
அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் சிங்கப்பூர் சலூன் என வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை கோகுல் என்பவர் இயக்க உள்ளார்.
 
இந்த படத்தில் நாயகியாக பிரபல தெலுங்கு நடிகை ஷிவானி ராஜசேகர் நடிக்க உள்ளதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்