'காந்தாரா’ நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (15:15 IST)
சமீபத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், ரூபாய் 16 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் காந்தாரா திரைப்படத்தை நடித்து இயக்கிய ரிஷப் ஷெட்டிக்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பதும் சமீபத்தில் இவரை அழைத்து பிரதமர் மோடியை நேரில் பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர் பிரிவில் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது சற்று முன் அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்