மோடியுடன் ரிஷப் ஷெட்டி, யாஷ் அடுத்தடுத்த சந்திப்பு: கர்நாடக தேர்தல் பின்னணியா?

செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (15:06 IST)
மோடியுடன் ரிஷப் ஷெட்டி, யாஷ் அடுத்தடுத்த சந்திப்பு: கர்நாடக தேர்தல் பின்னணியா?
கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சமீபத்தில் தாக்கல் செய்ய பட்ஜெட்டில் கர்நாடக மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது என குற்றம் சாட்டப்பட்டது. 
 
இந்த நிலையில் பிரதமர் மோடியை கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரபல நடிகர்கள் அடுத்தடுத்து சந்தித்து வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி பிரதமர் மோடியை சந்தித்த புகைப்படம் வைரலான நிலையில் சமீபத்தில் கேஜிஎப் நடிகர் யாஷ், பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்
 
இருவருமே மோடியின் புகழ் பாடி பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்துள்ளனர். கர்நாடக மாநில தேர்தலை மனதில் வைத்து பாஜக, பிரபல நடிகர்களை பிரதமர் மோடியுடன் சந்திக்க திட்டமிடுகிறது என்று கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்திலும் ரிஷப் ஷெட்டி மற்றும் யாஷ் ஆகியவர்கள் பிரச்சாரம் செய்வார்கள் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்