மீண்டும் இணையும் ஆர்.ஆர்.ஆர். படக்குழு ! ராஜமெளலி திட்டம்!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (22:39 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமெளலி . இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவருடன் இணைந்து, சமுத்திரகனி, ஆலிட்யாபட், உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படம் ரூ.1000கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்திலும் 45 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில், ஆர்.ஆர்.ஆர் பட கூட்டணியை வைத்து, மீண்டும் ஒரு படம் இயக்க ராஜமெளலி திட்டமிட்டுள்ளதாகவும்,  இதுகுறித்து தெலுங்கு படத் தயாரிப்பாளரிடம் கதை கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, ராஜமெளலி – மகேஷ்பாபு இணையும் பிரமாண்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின், அடுத்ததாக ஆர்.ஆர்.ஆர் படக் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்