ஜூனியர் NTR அடுத்த படம்…. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

வியாழன், 19 மே 2022 (16:07 IST)
RRR படத்துக்குப் பிறகு ஜூனியர் என் டி ஆர் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு இன்று இரவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக மார்ச் 25 ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் உலகளவில் இந்த படம் திரையரங்குகளின் மூலம் வசூலாக 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதையடுத்து இந்த படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான ஜூனியர் NTR-ன் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்