தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவிக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்துள்ளதாக ரவி தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. ஆனால் தனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஆர்த்தி குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். இவர்கள் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் ரவி மோகன் தன்னுடைய ரவிமோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது. அதில் அந்த நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியானது. அதில் ஜெயம் ரவி, எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்கும் ப்ரோ கோட் படம் மற்றும் ஜெயம் ரவி இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் படம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகின.