மீண்டும் இணைந்து நடிக்கும் கார்த்தி & ஜெயம் ரவி… இயக்குனர் யார் தெரியுமா?

vinoth

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (15:04 IST)
நடிகர் ரவி மோகன் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சினிமாவிலும் தற்போது ஒரு தேக்க நிலையில் உள்ளார். அவரின் படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து வர, அவரது மனைவி ஆர்த்தியையும் விவாகரத்து செய்யவுள்ளார். அது சம்மந்தமான சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

இந்நிலையில் இன்று ரவி மோகன் தன்னுடைய ‘ரவிமோகன் ஸ்டுடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதில் அவரோடு கென்னிஷாவும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சுதா கொங்கரா மற்றும் கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய கார்த்தி “நானும் ரவியும் கூடிய விரைவில் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளோம். அந்த படத்தை ரவியே தயாரித்து இயக்குகிறார்.” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே இவர்கள் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்