யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம்… ஆனால் கடவுளை?- யாரை சொல்கிறார் ஆர்த்தி ரவி?!

vinoth

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (10:00 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவிக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர்  ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்துள்ளதாக ரவி தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. ஆனால் தனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஆர்த்தி குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். இவர்கள் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இவர்கள் பிரிவுக்குக் காரணமாக பிரபல பாடகி கென்னிஷா பிரான்சிஸ் பெயர் சொல்லப்பட்டது.  கென்னிஷா மற்றும் ரவி மோகன் ஆகிய இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதை இருவருமே மறுத்தனர். ரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜெயம் ரவி மற்றும் கென்னிஷா ஆகிய இருவரும் ஒரே நிறத்தில் ஆடையணிந்து ஒன்றாக வந்து கலந்துகொண்டது மீண்டும் சர்ச்சைகள் கிளம்பக் காரணமாக அமைந்தது.

தற்போது ரவி, கெனிஷாவோடு பல பொது நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக வந்து செல்கிறார். சமீபத்தில் இருவரும் திருப்பதிக்கு சென்று வழிபட்டனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வைரல் ஆகின.இந்நிலையில் ஜெயம் ரவியின் முன்னாள் மனைவி ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம், ஏன் உங்களையேக் கூட நீங்கள் ஏமாற்றலாம். ஆனால் கடவுளை உங்களால் ஏமாற்ற முடியாது’ எனப் பதிவிட்டுள்ளார். ரவி மற்றும் கெனிஷாவின் கோயில் வருகையைக் கண்டிக்கும் விதமாகதான் ஆர்த்தி இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்று விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்