மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவானாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி… ரவி மோகனுக்கு நீதிமன்றம் அவகாசம்!

vinoth

புதன், 21 மே 2025 (14:55 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவிக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர்  ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்துள்ளதாக ரவி தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. ஆனால் தனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஆர்த்தி குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். இவர்கள் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இவர்கள் பிரிவுக்குக் காரணமாக பிரபல பாடகி கென்னிஷா பிரான்சிஸ் பெயர் சொல்லப்பட்டது.  கென்னிஷா மற்றும் ரவி மோகன் ஆகிய இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதை இருவருமே மறுத்தனர். ரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜெயம் ரவி மற்றும் கென்னிஷா ஆகிய இருவரும் ஒரே நிறத்தில் ஆடையணிந்து ஒன்றாக வந்து கலந்துகொண்டது மீண்டும் சர்ச்சைகள் கிளம்பக் காரணமாக அமைந்தது.

இதையடுத்து ஆர்த்தி, ரவி மோகன், ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் மற்றும் கென்னிஷா ஆகியோர் அடுத்தடுத்து தங்கள் பக்க நியாயத்தை வெளிப்படுத்தி அறிக்கைகளை வெளியிட்டனர். இந்த விவாகரத்து சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் அதில் ஆர்த்தி ரவி சார்பில் மாதம்தோறும் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சமாகத் தரவேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளார். இது சம்மந்தமாகப் பதிலளிக்க  ஜெயம் ரவிக்கு நீதிமன்றம் ஜூன் 12 ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்