இந்த ஆண்டு தீபாவளிக்கு டூட்' அல்லது 'லைக்.. குழப்பத்தில் பிரதீப் ரங்கநாதன்..!

Siva

வியாழன், 4 செப்டம்பர் 2025 (19:04 IST)
இந்த ஆண்டு தீபாவளிக்கு எந்த படம் ரிலீஸாகும் என்பதில் பெரிய குழப்பம் பிரதீப் ரங்கநாதனுக்கு நீடிக்கிறது. பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டூட்' மற்றும் 'லைக்' ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகலாம் என்ற நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். இரண்டு படங்களும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால், தனித்தனியே வெவ்வேறு நாட்களில் வெளியானால் தியேட்டர்களுக்கு லாபம் அதிகரிக்கும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
 
'டூட்' படத்தின் விநியோக உரிமையை ராகுல் என்பவர் வாங்கியுள்ளார். அவர் கிட்டத்தட்ட ₹10 கோடி அட்வான்ஸ் கொடுத்துள்ளார். கடந்த பிப்ரவரியில் அட்வான்ஸ் கொடுத்ததால், அதை வட்டிக்கு வாங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது. மேலும், சமீபத்தில் ராகுல் வெளியிட்ட 'குபேரா' என்ற தனுஷ் படம் சரியாகப் போகாததால், அவர் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ₹10 கோடி திருப்பித் தர வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இதனால், பண சிக்கலில் உள்ள ராகுல், தீபாவளிக்கு நிச்சயம் 'டூட்' படத்தை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதேசமயம், மைத்திரி மூவி மேக்கர்ஸ், 'லைக்' படத்தின் ரிலீஸை தள்ளிப்போட தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக முடிவை இரு தரப்பும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்