அமேசான் நிறுவனத்தால் ஏற்பட்ட திருப்புமுனை.. புதிய இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்..!

Siva

வியாழன், 4 செப்டம்பர் 2025 (19:08 IST)
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான 'ஸ்டோன் பெஞ்ச்', தற்போது தெலுங்கில் மூன்று புதிய படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அவற்றில் ஒரு படத்தை லோகேஷா என்பவர் இயக்கவுள்ளார். லோகேஷா இதற்கு முன்பு இயக்கிய '11' திரைப்படம், திரையரங்குகளில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
 
இருப்பினும், அந்தப் படம் அமேசான் பிரைமில் வெளியானபோது பெரும் வரவேற்பை பெற்றது. ₹6.5 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட அந்தப் படம், அமேசான் மூலம் ₹8.5 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது.
 
படத்தின் வெற்றியை பார்த்த அமேசான் நிறுவனம், '11' திரைப்படத்தை பிற மொழிகளான பெங்காலி, மராத்தி போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இது புதிய இயக்குநரான லோகேஷாவுக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்