தமிழ் சினிமாவில் 80 களின் இறுதியில் அறிமுகம் ஆகி 90 களிலும் 2000 களின் தொடக்கத்திலும் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் தேவா. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் தமிழ் சினிமா சந்தையில் இருந்து வெளியேறினார். இப்போது பல ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவர் கச்சேரிகள் மூலமாகக் கம்பேக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஆதி நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகும் மீசைய முறுக்கு 2 படத்தில் தனக்கு வில்லனாக நடித்ததாகவும், அந்த வாய்ப்பையும் நிராகரித்து விட்டதாகவும் தேவா தெரிவித்துள்ளார் தேவா. இதுபற்றி “நான் இப்போது கச்சேரிகளில் பிஸியாக இருக்கிறேன். மேலும் நான் ஒரு தொழில்முறை நடிகனும் இல்லை” எனக் கூறியுள்ளார்.