மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குனர் இரும்புக் கை மாயாவி எனும் படத்தை இயக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான வணிக இயக்குனராக உருவாகி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய மாநகரம் மற்றும் கைதி ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது. அதையடுத்து அவர் கமலை வைத்து விக்ரம் எனும் படத்தை இயக்க உள்ளார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தான் இயக்க விரும்பும் படம் பற்றி கூறியுள்ளார். இரும்புக் கை மாயாவி என்ற படத்தை தனது இரண்டாவது படமாக உருவாக்க நினைத்ததாகவும், ஆனால் அதற்கான கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் என்பதால் அதனை இப்போது மெருகேற்றிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இரும்புக் கை மாயாவி என்ற தமிழ்க் காமிக்ஸ் தொடர் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.