கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் இயக்குனராகும் ரத்னகுமார்… ஹீரோவாக ‘ரெட்ரோ’ வில்லன்!

vinoth

வியாழன், 10 ஜூலை 2025 (10:28 IST)
மேயாத மான் என்ற வெற்றிப் படத்தின் மூலம் இயக்குனராக தனது அறிமுகத்தைப் பதிவு செய்தார் ரத்னகுமார். அதன் பின்னர் அவர் இயக்கிய ‘ஆடை’ மற்றும் ‘குளுகுளு’ ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன.

இதன் காரணமாக தன்னுடைய நெருங்கிய நண்பரான லோகேஷ் கனகராஜின் படங்களில் இணை இயக்குனராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார்.  அப்படி அவர் பணியாற்றிய லியோ படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யை உயர்த்திப் பேசுவதற்காக, ரஜினியை இழிவுபடுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சையில் சிக்கினார்.

இதனால் இப்போது உருவாக்கத்தில் இருக்கும் ரஜினி - லோகேஷ் படத்தில் இருந்து ரத்னகுமார் விலக்கப்பட்டார். இதையடுத்து தற்போது அவர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் மூலமாக இயக்குனராகவுள்ளார். இந்த படத்தில் ரெட்ரோ படத்தின் வில்லன் ‘விது’ கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்