மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான மோகன் லால், மம்மூட்டி, பஹத் பாசில் மற்றும் மேலும் சில முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ள மல்டி ஸ்டாரர் படம் ஒன்று உருவாகியுள்ளது. இந்த படத்தை மாலிக் புகழ் மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இந்த படத்துக்கு பேட்ரியாட் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் மூலம் மம்மூட்டி மற்றும் மோகன் லால் ஆகியோர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இணையவுள்ளனர். கடைசியாக 2008 ஆம் ஆண்டு 20-20 என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இவர்களோடு பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டவர்களும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இராணுவ வீரர்களாக மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் நடிக்க, பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஒரு மிஷனுக்காக மீண்டும் ஒன்றிணைவது போன்ற கதையாக இருக்கும் என்பதை டீசர் கோடிட்டுக் காட்டுகிறது.