தளபதியோட நடிக்க போறேன்.. வேற என்ன வேணும்! – வைரலாகும் ராஷ்மிகா-விஜய் புகைப்படம்!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (13:01 IST)
நடிகர் விஜய்யின் 66வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில் விஜய் – ராஷ்மிகா புகைப்படம் வைரலாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குவதாக கடந்த சில மாதங்கள் முன்னதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் நாயகியாக யார் நடிக்கப்போவது என பல்வேறு யூகங்கள் எழுந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா பெயரும் அதில் அடிபட்டது.

நேற்று ராஷ்மிகா பிறந்தநாளில் அவர் இந்த படத்தில் நடிக்க இருப்பதை படக்குழுவினர் சர்ப்ரைஸாக அறிவித்தனர். தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்கள் மூலம் புகழ்பெற்று தெலுங்கு முன்னணி ஹீரோக்களோடு நடித்துள்ள ராஷ்மிகாவுக்கு நடிகர் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இதை ராஷ்மிகாவே ஒரு பேட்டியின்போது கூறியுள்ளார்.

இந்நிலையில் தனது நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறியுள்ளது ராஷ்மிகாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தளபதி 66 படப்பிடிப்பு இன்று தொடங்கும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யை ராஷ்மிகா திருஷ்டி முறிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்