பல முக்கிய பாகிஸ்தான் பிரபலங்களின் சமூக ஊடகக் கணக்குகள் இந்தியாவில் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. ஹனியா ஆமிர், மஹிரா கான், ஷாஹித் அப்ரிடி, மாவ்ரா ஹோகன் மற்றும் ஃபவாத் கான் போன்ற பாகிஸ்தான் பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் கணக்குகள் இன்று காலை முதல் இந்திய பயனர்களுக்கு மீண்டும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரபலங்களான சபா கமர், மாவ்ரா ஹோகன், ஃபவாத் கான், ஷாஹித் அப்ரிடி, அஹாத் ராசா மிர், யும்னா ஜைதி மற்றும் டேனிஷ் தைமூர் உள்ளிட்ட பல பாகிஸ்தானிய பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இன்று தேடும்போது, "இந்தக் கணக்கு இந்தியாவில் கிடைக்கவில்லை. சட்டப்பூர்வ கோரிக்கைக்கு இணங்கி, இந்த உள்ளடக்கத்தை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளதால் இது நிகழ்ந்துள்ளது" என்ற ஒரு பாப்-அப் செய்தி தோன்றுகிறது.