படத்தைப் படமாக மட்டும் பாருங்கள்.. ‘அனிமல்’ குறித்த சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தனா பதில்!

vinoth

வியாழன், 3 ஜூலை 2025 (08:29 IST)
கன்னட சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய ராஷ்மிகா தற்போது பேன் இந்தியா நடிகையாக அறியப்படுகிறார். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர். பாலிவுட்டில் அவர் நடித்த அனிமல் உள்ளிட்ட படங்கள் பெருவெற்றி பெற்றன.

தற்போது இயக்குனர் ரவீந்தர புள்ளே இயக்கும் ‘மைசா’ எனும் பேன் இந்தியா படத்தில் ராஷ்மிகா நடிக்கிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில் ராஷ்மிகா சமீபத்தில் அளித்த பேட்டியில் அனிமல் படம் குறித்த சர்ச்சைகளுக்கு(ஆணாதிக்க சிந்தனைகள் மற்றும் அதீத வன்முறை) பதிலளித்துள்ளார்.

அதில் “ஒரு படத்தில் ஹீரோ சிகரெட் பிடித்தால் அது ரசிகர்களையும் தூண்டுவதாக சொல்கிறார்கள். ஆனால் சமூகத்தில் புகைபிடிப்பது சாதாரணமாக உள்ளது. நான் அனிமல் படத்தில் நடித்திருப்பதால் ஒரு படத்தைப் படமாக மட்டும் பாருங்கள் என்றுதான் சொல்வேன்.  ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ‘க்ரே’ தன்மை உள்ளது. அதைதான் சந்தீப் அனிமல் படத்தில் காட்டியுள்ளார். அதனால்தான் அதை மக்கள் வரவேற்றுப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்