ராஷ்மிகாவால் தாமதமானதா தளபதி 66 ஷூட்டிங்?

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (15:56 IST)
ராஷ்மிகா மந்தனா தளபதி 66 படத்தின் படப்பிடிப்பில் தற்போது கலந்துகொள்ள உள்ளாராம்.

தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது இன்று மீண்டும் தொடங்க உள்ளது. இன்றைய படப்பிடிப்புக்காக விஜய் ஹைதராபாத் செல்ல விமான நிலையம் வந்த காட்சிகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை வம்சி இயக்கி வருகிறார் என்பதும், தில் ராஜூ தயாரித்து வருகிறார் என்பதும் தமன் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்பே தொடங்க இருந்ததாம். ஆனால் ராஷ்மிகா வேறு சில படங்களில் நடித்து வந்ததால் இரண்டு நாட்கள் தாமதமாக தொடங்கியுள்ளதாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்