பாலியல் புகாரை அடுத்து நடிகர் சங்க பொறுப்பில் இருந்து வெளியேறிய நடிகர்!

திங்கள், 2 மே 2022 (10:28 IST)
கேரளாவை  சேர்ந்த விஜய் பாபு ஃபிரைடே பிலிம் ஹவுஸ் என்ற மலையாள பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகின்றார்

இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவரின் படத்தில் நடிகை ஒருவர் இவர் மீது கடந்த ஏப்ரல் மாதம் உடல் ரீதியாக தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாக புகாரளித்தார்.

இதையடுத்து சமூகவலைதளத்தில் தோன்றி பேசிய விஜய் பாபு, சம்மந்தப்பட்ட பெண்ணின் பெயரை வெளிப்படுத்தினார். இதையடுத்து அவர் மேல் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட, வேறு ஒரு பெண்ணும் விஜய் பாபு மீது பாலியல் புகார் அளித்தார். இந்நிலையில் மலையாள நடிகர் சங்கமான AMMA –ல் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்த விஜய் பாபு அந்த பதவியில் இருந்து வெளியேறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்