நிச்சயதார்த்தம் வரை சென்று நின்ற ராஷ்மிகாவின் திருமணம்? மாப்பிள்ளை பிரபல ஹீரோவா?

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (17:46 IST)
வளர்ந்து வரும் இளம் நடிகையான ராஷ்மிகா கன்னட கதாநாயகன் ஒருவருடன் காதலில் இருந்து அது நிச்சயதார்த்தம் வரை சென்று நின்றதாக சொல்லப்படுகிறது.

"கிரிக் பார்ட்டி" என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதையடுத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் தேவரக்கொண்டாவுடன் அவர் சேர்ந்து நடித்த படங்களான டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்து தென்னிந்திய சினிமா உச்ச நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில் இப்போது ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் பற்றிய செய்தி ஒன்று உலாவந்து கொண்டு இருக்கிறது. ராஷ்மிகா கன்னட சினிமாவின் முன்னணி இளம் கதாநாயகன் ஒருவரை காதலித்து அந்த காதல் நிச்சயதார்த்தம் வரை சென்று நின்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த செய்தி உண்மையா என்பதை ராஷ்மிகா தரப்பு உறுதிப் படுத்தவில்லை.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்