இன்ஸ்டாகிராமில் 2 கோடி பாலோயர்ஸ்… ராஷ்மிகா படைத்த சாதனை!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (16:17 IST)
நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்தியாவின் மிக முக்கியமான நடிகையாக உருவாகி வருகிறார்.

தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. படங்களில் மட்டுமில்லாமல் சமூகவலைதளங்களிலும் இவர் ஒரு சூப்பர் ஸ்டார்தான். அந்த அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இத்தனைக்கும் தமிழில் அவர் நடித்த சுல்தான் படம் மட்டுமே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் தொடர்ந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அதனால் அவருக்கு மிகப்பெரிய அளவில் பாலோயர்ஸ் உள்ளனர். இப்போது தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக பாலோயர்ஸ் கொண்டவராக உருவாகியுள்ளார். அவரை 2 கோடி பேர் இன்ஸ்டாவில் பின் தொடர்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்