படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களை வெளியிட்ட அருண் விஜய் படக்குழு!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (16:11 IST)
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் நடந்துவருகிறது.

நீண்டநாள் கழித்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் அவரது மைத்துனரும்,நடிகருமான  அருண்விஜய் ஒரு ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளார்.  இப்படம் அருண்விஜய்க்கு 33வது படம். அதேபோல் ஹரிக்கு இந்த படம் 16 வது படமாகும்.  இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக  பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும், ராதிகா, பிரகாஷ்ராஜ், புகழ், அம்மு அபிராமி, ஜெயபாலன், உள்பட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இப்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து வரும் நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்