கொரோனா இரண்டாவது அலை! சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (15:23 IST)
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன. முக்கியமாக சென்னை, மதுரை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகி இப்போது குறைந்து வருகிறது.

இந்நிலையில் திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ‘தமிழகத்தில் ‘கொரோனாவின் இரண்டாவது அலையை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்படி  அளித்தால்தான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்.’ எனக் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்