இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, சோனம் கபூர் கதாநாயகியாக நடித்திருந்தார். காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்தது. தற்போது இந்த படம் வெளியாகி 12 ஆண்டுகள் கழித்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரி ரிலீஸ செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் AI தொழில்நுட்பம் மூலமாக க்ளைமேக்ஸ் காட்சியை மாற்றியுள்ளது தயாரிப்பு நிறுவனம். இதற்கு இயக்குனர் ஆனந்த் எல் ராய் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஈரோஸ் நிறுவனம் “கதையின் அடிப்படையை மாற்றாமல் ஏ ஐ மூலமாக சில அம்சங்களைப் புதுப்பித்துள்ளோம். உலகெங்கும் இதுபோன்ற புதுவிதமான முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது” என விளக்கமளித்துள்ளது.