சிரிக்க, சிந்திக்க, வியக்க வைத்தது…வடிவேலுவின் ‘மாரீசன்’ படத்தைப் பாராட்டிய கமல்ஹாசன்!

vinoth

வியாழன், 24 ஜூலை 2025 (09:30 IST)
மாமன்னன் படத்த்தின் வெற்றிக் கூட்டணியான பகத் பாஸில் மற்றும் வடிவேலு  மீண்டும் இணைந்து மாரீசன் என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் சுதேஷ் சங்கர் என்பவர் இயக்கி வருகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் இந்த படத்தைத் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இத படம் நாளை ரிலீஸாகிறது.

அல்ஸீமர் நோயாளியான வடிவேலு ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் போது அதை பெட்டித் திருடனான பஹத் பார்த்துவிடுகிறார். அவரிடம் இருந்து பணத்தைத் திருட அவரோடு திருநெல்வேலியில் இருந்து திருவண்ணாமலை வரை செய்யும் பயணம்தான் ‘மாரீசன்’. இந்த படத்தை சமீபத்தில் பார்த்துள்ள கமல்ஹாசன் படத்தை சிலாகித்துப் பாராட்டியுள்ளார்.

அதில் “மாரீசன் படம் பார்த்தேன். இந்த படம் நகைச்சுவை மற்றும் ஆழமான உணர்வுக்கு இடையில் பயணிக்கிறது. என்னை சிரிக்கவும், சிந்திக்கவும் மற்றும் வியக்கவும் வைத்தது. படக்குழுவினருடன் அற்புதமான உரையாடலை மேற்கொண்டு அவர்களை வாழ்த்தினேன்.
படம் நகைச்சுவையாக சொல்லப்பட்டாலும் அதன் அடித்தளத்தில் சமூகத்தின் இருண்ட பக்கங்கள் மீது ஒளியைப் பாய்ச்சி சமூக பொறுப்புணர்வை சொல்கிறது.  ஒரு பார்வையாளனாகவும், படைப்பாளனாகவும் இதுபோன்ற உயிருள்ள, புதுவிதமான சினிமாக்கள் நோக்கிதான் நான் ஈர்க்கபடுகிறேன்.” என பாராட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்