பாலிவுட்டின் அடுத்த தோல்விப் படம் ரன்பீர் கபூரின் ‘ஷம்ஷேரா’?

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (14:36 IST)
ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்தவாரம் வெளியான ஷம்ஷேரா திரைப்படம் முதல் நாளிலேயே மோசமான விமர்சனங்களை சந்தித்ததால் வசூலில் தொய்வடைந்துள்ளது.

பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ள ஷம்ஷேரா திரைப்படம் தென்னிந்திய மொழிகளிலும் அதே பெயரில் ரிலீஸ் ஆனது. இதற்காக படத்தின் நாயகன் ரன்பீர் கபூர் தமிழகத்துக்கு ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டார்.

இந்நிலையில் வெளியான முதல் நாளிலேயே மிக மோசமான விமர்சனங்களை இந்த திரைப்படம் பெற்றுள்ளது. இதனால் சமீபத்தில் வெளியாகி படுதோல்வி அடைந்த சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்தை விட குறைவாக வசூலையே முதல் நாளில் எட்டியுள்ளது. விமர்சனங்களும் மோசமாக இருப்பதால் இரண்டாவது வாரத்தில் வசூல் மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்