ரஜினி 170 படத்தில் இணையும் பாகுபலி வில்லன்!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (08:20 IST)
ஜெயிலர் படத்தின் ரெக்கார்ட் பிரேக்கிங் வசூலுக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. கடந்த மாதமே தொடங்க வேண்டிய இந்த படம் லைகாவின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இன்னும் தொடங்கப்பட வில்லை எனத் தெரிகிறது.

இப்போது செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நானி நடிக்க இருந்த ஒரு பாத்திரத்தில் இருந்து வெளியேறி விடவே, அவருக்கு பதில் ஷர்வானந்த் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அந்த வேடத்தில் நடிகர் ராணா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒரு முக்கிய வேடத்தில் துஷாரா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்