ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவான ‘குயின்’… வெளியான செம்ம அப்டேட்!

Webdunia
திங்கள், 30 மே 2022 (16:35 IST)
ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் இயக்குனர்கள் கௌதம் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் குயின் தொடர் உருவானது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற திரைப்படமும், குயின் என்ற இணையத்தளத் தொடரும் வெளியானது. குயின் தொடரில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.

இயக்குனர்கள் கௌதம் மேனனும், பிரசாத் முருகேசனும் இயக்கி இருந்தார்கள். இந்த தொடர் பரவலான வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொடரிலும் ரம்யா கிருஷ்ணணே முக்கிய வேடத்தில் நடிக்க, பிரசாத் முருகேசன் இயக்குகிறார். தற்போது இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்