தளபதி 68 படத்தில் இணைந்த பிரபல நடிகை!

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (10:46 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின்  ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த படத்துக்கு ‘பாஸ்’ அல்லது ‘பஸ்ஸில்” என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மறுத்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நாளுக்கு நாள் பிரபல நடிகர், நடிகைகள் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் இப்போது படத்தில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்